நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் மெட்டுச்சாவடி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சங்கர்(27). இவர் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் நேற்றிரவு முதல் தேடி வந்த நிலையில், இடுகாட்டின் அருகே முட்புதரில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்
முட்புதரில் ஆண் சடலம் - போலீஸ் விசாரணை! - அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சங்கர் மர்மமான நிலையில் உயிரிழப்பு
நாமக்கல்: கீரம்பூர் அருகே முட்புதரில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![முட்புதரில் ஆண் சடலம் - போலீஸ் விசாரணை! man died mysteriously](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5709411-thumbnail-3x2-mys.jpg)
மூட்புதரில் ஆண் சடலம்
முட்புதரில் ஆண் சடலம்
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமத்தி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் சேலை வியாபாரியிடம் மோசடி - 4 பேர் கைது!
TAGGED:
மூட்புதரில் ஆண் சடலம்