நாமக்கல்:ராசிபுரம் 4 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பரிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட்டுடன் வந்த இளைஞர் ஒருவர், தாலி சங்கிலியைப் பறித்து சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசாரிடத்தில் அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்.
இந்நிலையில், வாகன சோதனையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய ஒருவரை சந்தேகித்த போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில் அவர் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பதும், அவரே செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.