தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: மநீம வேட்பாளர் - THANGAVEL

நாமக்கல்: அதிமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதி ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என நாமக்கல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்

By

Published : Mar 26, 2019, 8:21 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இறுதி நாளான இன்று, நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவேல் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆசிய மரியத்திடம் வேட்பு மனுவை வழங்கினார். இவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கவேல், தான் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தில் 37 வருடமாக பணியாற்றி வருகிறேன். மாநில செயற்குழு உறுப்பினராகவும் நாமக்கல் சேலம் மாவட்டத்தின் மண்டல பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.

முட்டை குளிர்சாதன மையம் அமைக்கப்படும், கொசவபட்டி ஏரியை தூர் வாரப்படும், ஆட்டோ நகரமாக மாற்றப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை கூறிய ஆளும் அதிமுக அரசு அதில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகவும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ராசிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


ABOUT THE AUTHOR

...view details