மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில், அண்ணா சிலை அருகிலுள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கருணாநிதியின் சாதனை விளக்கப் பதாகைகளை கைகளில் ஏந்தி தொண்டர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.