நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் குமார். இவர் ராசிபுரத்திலிருந்து புதுப்பாளையம் நோக்கி தனது சொகுசு காரில் சென்றுள்ளார்.
அப்போது ஈபி காலனி அருகே எதிர்பாராத விதமாக கார், டீக் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சொகுசு கார் தீ பற்றி எரிய தொடங்கியதில் டீக் கடையும் தீப்பற்றி எரிய தொடங்கியது.
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் காரில் வந்த வழக்கறிஞர் குமார், டீக் கடையில் இருந்த பெண் கமலம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டீக் கடைக்குள் புகுந்த சொகுசு கார் இதுகுறித்து தகவலறிந்த சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டதுறை அமைச்சர் சரோஜா மருத்துமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரேசன் கடை சுண்டலை கடத்த முயன்ற ஊழியர்: பறிமுதல் செய்த கிராம மக்கள்!