தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் சேலம் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் சுமார் 376 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை சங்க நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘எல்பிஜி டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் நிறுவனத்திலிருந்து எரிவாயு சேமிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4,800 டேங்கர் லாரிகள் செயல்பட்டுவருகின்றன.
இருப்பினும் அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் அளிக்கவில்லை. அதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக சுமார் 700 டேங்கர் லாரிகள் வேலையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.