கோவை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரும், ஊட்டியை சேர்ந்த சஞ்சனா என்பவரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் மே.1 ஆம் தேதி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்ககோரி நேற்று நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும், கண்காணிப்பாளரிடம் புகார் மனுவும் அளித்தனர்.
காதலித்து திருமணம் செய்தது குற்றமா..? - எஸ்பி அலுவகத்தில் 4 காதல் ஜோடிகள் தஞ்சம்! - காதல் ஜோடிகள்
நாமக்கல்: காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு காதல் ஜோடிகள், பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்ககோரி நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் திருச்செங்கோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த கெளரிசங்கரும் மேகஸ்ரீயும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். மேலும், காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்ககோரி சுபாஷ் - காவியா, அஜித்குமார்- சிந்துஜா ஆகிய காதல் ஜோடிகளும் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனுக்களை அளித்தனர்.
இவர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். ஒரே நாளில் காதல் ஜோடிகள் பாதுகாப்புகோரி புகார் அளித்தது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.