தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாரி டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள்! - மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டயர்களை ஜாக்கி வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lorry tyre theft

By

Published : Oct 1, 2019, 10:22 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஓவியம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கரூரிலிருந்து சொந்தமாக 24 டயர்கள் கொண்ட டேங்கர் லாரி ஒன்றை வாங்கியுள்ளார். லாரியின் நம்பர் மாற்றம் செய்வதற்காக தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.

டயர் திருடப்பட்ட லாரி

இந்நிலையில், இன்று காலை தூங்கி எழுந்த விஜயகுமார் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை நோட்டம் விட்டார். அப்போது, லாரியில் மாட்டியிருந்த 12 டயர்களை ஜாக்கி வைத்து மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனடியாக பரமத்தி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

டயர்கள் திருடப்பட்ட லாரி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், திருடிச் செல்லப்பட்ட 12 டயர்களின் விலை ரூபாய் 3 இலட்சம் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : 'குரங்குகளும் நம் குழந்தைங்கதான்' - ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாலதியின் கருணைமிகு சேவை!

ABOUT THE AUTHOR

...view details