நாமக்கல்: உயர்ந்துவரும் டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று (ஜூலை 21) நடைபெற்றது.
இதில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கோபால் நாயுடு, பொதுச்செயலாளர் ஜி.ஆர். சண்முகப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டது.
டீசல் விலை உயர்வு
பின்னர் ஜி.ஆர். சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக நாட்டில் மொத்தம் 26 லட்சம் லாரிகளில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மட்டுமே தற்போதைய நிலையில் இயங்கி வருகின்றன. டீசல் விலை 220 விழுக்காடு உயர்ந்துள்ளது".