தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டோக்கன் வழங்கிய அதிமுகவினர்; தடுத்து நிறுத்திய திமுகவினர் - நாமக்கல்லில் முதற்கட்ட வாக்கு பதிவு

நாமக்கல்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதை திமுகவினர் தடுத்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

localbody election starts peaceful
localbody election starts peaceful

By

Published : Dec 27, 2019, 12:46 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை, கொல்லிமலை, ராசிபுரம், வெண்ந்தூர், நாமகிரிபேட்டை, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 893 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் 1,020 காவல் துறையினர், 430 ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவில் ஒன்பது மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு 53 பேரும், 86 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு 403 பேரும், 164 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு 553 பேரும், ஆயிரத்து 320 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 ஆயிரத்து 863 பேரும் போட்டியிடுகின்றனர். முதல்கட்ட தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 306 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 48 பெண் வாக்காளர்கள், 16 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்க உள்ளனர்.

893 வாக்குச்சாவடிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

மேலும், இதேபோன்று பரமத்தி வேலூரை அடுத்த கோப்பனம்பாளையம் ஊராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அப்பகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து கொண்டிருந்ததை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினரும் தேர்தல் அலுவலர்களும் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்‌.

இதையும் படிங்க:

தாளவாடியில் ஆர்வத்துடன் வாக்களித்த மலைவாழ் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details