கார் வாடகை பாக்கியை தரக் கோரி ஆட்சியரிடம் மனு - உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல்: உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கான கார் வாடகை தொகை 2 லட்சம் ரூபாயை வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி கார் ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
![கார் வாடகை பாக்கியை தரக் கோரி ஆட்சியரிடம் மனு local body election car rent issue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:24:10:1602496450-tn-nmk-01-local-body-election-car-bill-issue-script-vis-7205944-12102020145142-1210f-1602494502-1027.jpg)
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஊரக உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்காக கார்களை வாடகைக்கு எடுத்தது.
தேர்தல் நடைபெற்று ஓராண்டாகியும் இதுவரை வாடகை தொகையை முழுமையாக வழங்கவில்லை.
இந்த நிலையில் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், “கடந்த ஆண்டு டிசம்பர் 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் ஆம்னி வேன்களை வாடகைக்கு இயக்கினோம். ஓராண்டாகியும் வாடகை, பெட்ரோல் தொகை 2 லட்ச ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை.
குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி தவிக்கும் நிலையில் நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.