நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வருபவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட கடைக்கு வந்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மது வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து டாஸ்மாக் அலுவலர்களிடம் கேட்டபோது, “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பூசி குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்குகே மது பாட்டில்