தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியுடன் தகராறு: 250 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசிக் கொன்ற கணவர்! - kollimalai two children murder

நாமக்கல்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது இரு குழந்தைகளை கொல்லிமலையிலிருந்து 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்த தந்தையை வாழவந்திநாடு காவல் துறையினர் கைது செய்தனர்.

Kollihills two children murder by his father

By

Published : Nov 13, 2019, 11:10 PM IST

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குண்டூர்நாட்டை அடுத்துள்ள அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி - பாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீதாஸ்(8) என்ற மகனும், கவிதர்ஷினி(5) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள காட்சி முனைக்குச் (view point) சென்றுள்ளார். பின்னர் அதில் ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டுக்குச் சென்ற பின் தனது குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து சிரஞ்சீவி அழுதிருக்கிறார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த மனைவி, சிரஞ்சீவியிடம் கேட்டபோது, அவர் எந்தப் பதிலும் கூறாத நிலையில், மனைவி வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

குழந்தைகளை தூக்கி வீசிய கொல்லிமலை

சிரஞ்சீவியிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தனது குழந்தைகளை சீக்குபாறை பள்ளத்தில் தூக்கி வீசியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை தூக்கி வீசிய இடத்திலிருந்து அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் காவல் துறையினர் இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். மேலும் குழந்தைகளைக் கொன்ற தந்தை சிரஞ்சீவியை கைது செய்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் உட்பட 4 பேருக்கு 10 வருட சிறை தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details