தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆகாய கங்கை அருவியில் குளிக்கத் தடை-சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்! - water falls in kollihills

நாமக்கல்: கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் ஆகாய கங்கை அருவியில் அருவியில் கற்கள் விழ அதிகளவு வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.

By

Published : Aug 22, 2019, 4:19 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக உள்ள கொல்லிமலையில் மக்கள் மிகவும் விரும்பக்கூடிய ஆகாய கங்கை அருவி உள்ளது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருவதால், ஆகாய கங்கையில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் மேலிருந்து கற்கள் விழ வாய்ப்புள்ளது எனவே பொது மக்களின் நலன் கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்கத்தடை.

இந்த தடையானது, மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details