நாமக்கல்: அலங்காநத்தம் அடுத்துள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஒஸக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையை முன்னிட்டு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் உடலில் கத்தியால் கீறி நடனமாடி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதனை உள்ளூர் மக்கள் கத்திப்போடும் நிகழ்ச்சி என்று அழைக்கின்றனர்.
அந்தவகையில், நேற்று (ஜன. 31) தை அமாவாசையை முன்னிட்டு கோயிலில் கத்திப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடலில் கத்திப்போட்டு நடனமாடினர்.