நாமக்கல்:தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் பணியில் தங்களை பரபரப்பாக ஈடுபடுத்திவருகின்றனர்.
வேட்புமனுவை தாக்கல்செய்த ஈஸ்வரன் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
kmdk General Secretary Eeswaran filed the nomination in thiruchencode
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவருகின்றனர். அதன்படி, திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று திருச்செங்கோடு தேர்தல் நடத்தும் அலுவலரான மணிராஜிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அவருடன் கட்சித் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.