நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், பொது மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் சூழலில், மனுதர்ம நூல் குறித்து திருமாவளவன் பேசியிருக்க வேண்டியதில்லை.
திருத்தப்பட்ட வேளாண் சட்டம், புதிய கல்வி கொள்கை, திருத்தப்பட்ட மின்சார சட்டம், நீட் தேர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இட ஒதுக்கீடு, மருத்துவ உயர்கல்வி படிப்பில் 50% இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை பேச வேண்டிய இந்நேரத்தில், திருமாவளவனின் பேச்சால் ஊடக கவனமும், மக்கள் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
திருமாவளவன் பேச்சு - திமுக கூட்டணியில் சலசலப்பு! 1920இல் தந்தை பெரியாரும், அம்பேத்கரும் மனு நூலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அன்றிருந்த நிலை வேறு, இன்றிருக்கும் நிலை வேறு. இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்ற வாதம் தேவையில்லாத ஒன்று. இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை “ என்றார்.
இவ்விவகாரத்தில் திருமாவளவனின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருமாவளவனுக்கு எதிராக கூட்டணியில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் எழுந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு வைரமுத்து ஆதரவு