நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் வேளாண் நிதியுதவி திட்டத்தில் போலியான ஆவணங்கள், தகுதியற்றவர்கள் என இதுவரை 2 ஆயிரத்து 136 பேரின் வங்கி கணக்குகள் மூலம் 83 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆயிரத்து 619 பேரின் வங்கி கணக்கில் இருந்து 62 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்மா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 36 தொழிநுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நேற்று தெரிவித்திருந்தார்.
கிசான் திட்ட முறைகேடு: தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி மனு! - Latest Namakkal News
நாமக்கல்: கிசான் திட்ட மோசடிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் 36 தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிட மாறுதல்களை ரத்து செய்திடக் கோரி அட்மா திட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் அட்மா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிநுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘’கிசான் திட்ட மோசடிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிசான் திட்டத்தில் முறைகேடு செய்யாமலேயே பணிமாற்றம் செய்துள்ளனர். அலுவலர்கள் செய்த தவறை மறைக்க தொழில்நுட்ப மேலாளர்கள் தவறு செய்ததாக தவறான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். தங்களது பணிமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 29ஆம் தேதி பணிமாற்றம் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்திரவிட்டது. உத்தரவு பெறும் முன்பே கட்டாயமாக பணிமாற்றம் செய்துவிட்டதாகவும், எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்'' என மனுவில் தெரிவித்திருந்தனர்.