கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினு வர்கீஸ், ஜிஜோ தாமஸ் ஆகிய இருவரும் கார் மூலம் பெங்களூரு சென்றுவிட்டு நாமக்கல் வழியாகச் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களது கார் நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது சாலையின் நடுப்பகுதியில் உள்ள பெயர் பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜினு வர்கீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.