கரோனா வைரஸ் பரவல் கராணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையைத் தவிர மற்ற கடைகள், நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டதால், அதனை சாதகமாகக் கொண்டு சட்டவிரோதமாக பலர் சாராயம் காய்ச்சி அவற்றை விற்பனை செய்துவருகின்றனர். அதனைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
நாமக்கல்லில் 300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு, இருவர் கைது - namakkal crime news
நாமக்கல்: ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 300 லிட்டர் சாராய ஊறல்களைக் காவல் துறையினர் அழித்தனர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், போதமலை அடிவாரத்தில் சாராயம் காய்ச்சிய நபரைக் கைது செய்து அவரிடம் இருந்த 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். இதையடுத்து குட்லாடம்பட்டியில் சாராயம் காய்ச்சிய மற்றொருவரைக் கைது செய்து 100 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
இதையும் படிங்க:சாராயம் காய்ச்சவோ, விற்பனை செய்யவோ கூடாது - காவல் துறை கடும் எச்சரிக்கை!