தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது மிகவும் வேதனையான ஒன்றாகும்.
'இந்தியாவில் ஆழ்துளைக் கிணற்றுக்கு தடைவிதிக்க வேண்டும்!' - sujith issue
நாமக்கல்: இஸ்ரேல் நாட்டைப் போன்று இந்தியாவிலும் ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் போன்ற பாலைவன நாடுகளில்கூட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கத் தடை உள்ளது. அதனால் அந்த நாட்டைப் போன்று இந்தியாவிலும் ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மீட்புப் பணிகளைப் பார்வையிட நடுக்காட்டுப்பட்டிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதால், அவருடன் வரும் தொண்டர்களால் மீட்புப் பணிக்கு தொய்வு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.