தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இந்தியாவைப் பாதிக்கும்' - நல்லசாமி - அந்நிய செலாவணியை அதிகரிக்க அரசு நடவடிக்கை

நாமக்கல்: வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் நிலையில், எரிபொருளில் எத்தனாலை சேர்த்து அந்நிய செலாவணியை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

ka.nallasamy
ka.nallasamy

By

Published : Jan 8, 2020, 11:57 PM IST

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் காவேரி, சரபங்கா, திருமணிமுத்தாறு உள்ளிட்ட ஆறுகளை கால்வாய் மூலம் இணைக்க வேண்டும். பின்னர் அந்தந்த பகுதிகளிலுள்ள ஏரிகளில் உபரி நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை செறிவூட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

நல்லசாமி செய்தியாளர் சந்திப்பு

பனை மரங்களையும், பனை தொழிலையும் மேம்படுத்த பனைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலையில், இதற்கு மாற்றாக எரிபொருளில் எத்தனாலை பயன்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை அரசு சேமிக்க முயற்சி செய்வது நல்லது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details