நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பாக புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
இங்கு கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்கள் உள்ளிட்டவைகள் 30 சதவிகிதம் தள்ளுபடியும் கம்பளி ரகங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு விற்பனையை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
காதி கிராப்டின் சொந்த தயாரிப்பிலான குளியல் சோப்புகள், தேன், தோல் பொருட்கள், ஜவ்வாது, ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பொங்கல் விற்பனையை தொடங்கிவைத்தார்.