நாமக்கல் மாவட்டம், வலையபட்டி, ஆண்டாபுரம், அரூர், ஒருவந்தூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளனர்.
மல்லிகை பூ விலை கடும் சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் கடந்த மாதம் மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலைபோனது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 என விலை குறைந்து விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கோடை மழை பெய்ததையொட்டி மல்லிகை பூக்களின் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால், சித்திரை மாதத்தில் சுப காரியங்கள் ஏதுமில்லாததால் பூவின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது" என்றார்.
இப்பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.