நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த வருமானவரித் துறை சோதனை குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், நீட் போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டண பயிற்சி வகுப்புகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட 17 பகுதிகளில் மேற்படி தொழில், கட்டுமானம், கல்வி நிலையங்கள்- அதன் உரிமையாளர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
வருமானவரித் துறைக்கு, பள்ளி மாணவர்களிடம் கூடுதலாகவும் முறைகேடாகவும் கட்டணம் வசூலிப்பதோடு அதற்காக பெற்றோரிடம் கொடுக்கும்போது ஒரு கட்டண ரசீதும் பின்னர் வருமானவரித் துறைக்கு வேறு மாதிரியான கட்டண ரசீதுகளும் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத சுமார் 30 கோடி ரூபாய்வரை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.