தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்தியா!' - மருத்துவ சிகிச்சை

நாமக்கல்: "தரமான மருத்துவ‌ சிகிச்சை அளிப்பதில் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது" என, வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் பாரிஸ்டர் சாமின் ஹைபட்வாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சாமின் ஹைபட்வாரி

By

Published : Feb 5, 2019, 5:39 PM IST


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 7-வது பன்னாட்டு மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. 'உடல் நல மருத்துவ தொழில்நுட்ப நிர்வாகம்' என்ற தலைப்பில் நேற்று தொடங்கிய இந்தக் கருத்தரங்கின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதனை

சுவாமி விவேகானந்தா மருந்தாக்கியல் கல்லூரி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், ஹாங்காங் சர்வதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெங்களுர் எம்.டி.சி. குளோபல் மற்றும் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதனை நடத்தின.

இதில், வங்கதேச நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினரான பாரிஸ்டர் சாமின் ஹைபட்வாரி விழாவின் தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் மருத்துவம் சர்வேதேச அளவில் சிறந்து விளங்குகிறது. இங்கு மிக குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகிறது. வருங்காலத்தில் இந்தியா இன்னும் உயர்வான இடத்தைப் பிடிக்கும். இன்னும் பல நாடுகள் இந்தியாவை நாடும். தற்போது இந்தியா ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா நாடாக விளங்குகிறது. அதில் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை டாக்கா சர்வவதேச பல்கலைக்கழகத்துடன் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details