'தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' - அமைச்சர் தங்கமணி! - Liquor is enforced in Tamil Nadu
நாமக்கல்: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட சமூகநலத் துறை சார்பாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று ஆயிரத்து 333 பயனாளிகளுக்கு 10 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள திருமண நிதி உதவி, தாலிக்குத் தங்கம் ஆகியவற்றை வழங்கினர்.
இதனையடுத்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி என்பது 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியேற்பார் என்றார்.