தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டிய மின்சார வாரிய ஊழியர் கைது! - POCSO Act arrest news

நாமக்கல்: பத்தாம் வகுப்பு மாணவியை அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டிய மின்சார வாரிய தற்காலிக ஊழியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Rasipuram Pocso Arrested
Rasipuram Pocso Arrested

By

Published : Feb 6, 2021, 5:14 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மாணவிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலபுரம் பகுதியைச் சேர்ந்த மின்சார வாரியத்தில் தற்காலிமாக பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்ற இளைஞருக்கும் கடந்த ஐந்து மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்திய இளைஞர் மாணவியை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர் மாணவியிடமும், அவரது தாயாரிடமும் நான் சொல்வதை கேட்க வேண்டும், இல்லையெனில் எடுத்துள்ள ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தாயார் உடனடியாக ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...சிவகாசி கல்லூரி மாணவி தற்கொலை: பொறியியல் கல்லூரி மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details