நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடியில் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இன்று காலை கல்லூரிப் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியினை ஊழியர்கள் செய்துவந்துள்ளனர்.
அப்போது பேருந்தின் டீசல் டேங்க் அருகே வெல்டிங் பணி மேற்கொண்டபோது எதிர்பாராதவிதமாக திடீரென டீசல் டேங்க் வெடித்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பின் தீயானது மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.