தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2019, 9:01 AM IST

ETV Bharat / state

'விவசாய கமிஷன் பரிந்துரையை மோடி ஏற்கவில்லை..! - நல்லுசாமி குற்றச்சாட்டு

நாமக்கல்: "விவசாய கமிஷன் பரிந்துரை மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகள் நலன் சார்ந்த எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை" என்று, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்லுசாமி

நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லுசாமி, "தமிழக அரசு தொடர்ந்து கள் இறக்குமதி செய்பவர்களை அவமதித்து வருகிறது. கள் ஒரு போதைப்பொருள் என கூறி வருகின்றனர். கள்ளை ஒரு போதைப்பொருள் என யாரேனும் நிரூப்பித்தால் ரூ.10 கோடி பரிசாக அளிக்கிறேன்" என்றார்.

இராசிபுரம் குழந்தைகள் விற்பனை குறித்து எழுப்பிய கேள்விக்கு, "இராசிபுரத்தில் மட்டும் குழந்தைகள் விற்பனை நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது குழந்தையின்மைதான். தம்பதியினருக்கு ஏற்படும் குறைபாடுகள் முக்கிய காரணமாக விளங்குகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளால் மனிதர்கள் வாழ இயலாத சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக அரசும் காங்கிரசும் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது வெற்று அறிக்கை. இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் செய்யாததை தற்போது வெற்றிப்பெற்றால் செய்யமுடியுமா? விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று இந்த அரசு செயல்பட வேண்டும். முந்தைய தேர்தல் அறிக்கையில் விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் மோடி. தற்போது வரை விவசாய கமிஷன் பரிந்துரை ஏற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகள் நலன்சார்ந்த எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details