தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தகராறு: கணவன்-மனைவி தற்கொலை - கணவன் மனைவி தற்கொலை

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே  குடும்பத்தகராறு காரணமாக கணவனும் மனைவியும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

கணவன் மனைவி தற்கொலை
கணவன் மனைவி தற்கொலை

By

Published : Oct 27, 2020, 5:53 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தந்தர்பிசி (24). இவரது மனைவி ஜமுனாபிசி (26). இருவரும் ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் (23) என்பவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள சுந்தரராஜன் என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்காக அழைத்து வந்தார்.

அங்கு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 26) தந்தர்பிசி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறு காரணமாக இருவரும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி கிடந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details