தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை! - விவசாயி வீட்டில் நகை கொள்ளை

நாமக்கல்: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை

By

Published : Sep 11, 2020, 7:42 PM IST

நாமக்கல் அடுத்த காதப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர். இவரது மனைவி விஜயலெட்சுமியுடன் மட்டைப்பாறை புதூரில் குடியிருந்து வருகிறார்.

சேகரின் தாய் பாவாயி, மகள் சத்யாவும் காதப்பள்ளியில் உள்ள பூர்விக வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வளாகத்தில் பாவாயியும், சத்யாவும் தூங்கியுள்ளனர்.

அப்போது, திடீரென வீட்டிலிருந்த நாய் இடைவிடாமல் குரைத்ததைப் பார்த்த சத்யா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சேலைகள் சிதறி கிடந்துள்ளததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பீரோவை பார்த்த போது அதிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நல்லிப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து முக்கிய தடயங்களை சேகரித்து பின்னர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details