தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைத்தேனீ கடித்த விவகாரம் -  5 பேருக்குத் தீவிர சிகிச்சை! - mountain honey bee

நாமக்கல்: பரமத்திவேலூரை அடுத்துள்ள செஞ்சுடையாம்பாளையத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தவர்களை மலைத்தேனீ கடித்ததில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

honey-bee-bytes-5-peoples

By

Published : Oct 13, 2019, 1:35 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செஞ்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். அவரது தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்வதற்காக இருக்கூர் மற்றும் செஞ்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வி, காளியம்மாள், விஜயா மற்றும் நல்லம்மாள் ஆகியோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

மலைத்தேனீ

அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த மலைத் தேனீக்கள் திடீரென அவர்களைத் தாக்கத் தொடங்கியது. இதில் ஐந்து பேரையும் ஏராளமான தேனீக்கள் கொட்டியதில், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மலைத்தேனீ கடித்ததில் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஐந்து பேரையும் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றியது ஆட்டோ ஓட்டுநர், வனத்துறையினர் அல்ல - வெளியானது சரியான சிசிடிவி!

ABOUT THE AUTHOR

...view details