நாமக்கல்:திருச்செங்கோடு சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். அப்பகுதியில், 25 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இவருடைய வீட்டின் முன் அண்மையில் புதியதாக சாலைகள் போடபட்டுள்ளது. சாலைகள் விட்டின் வாசலை விட உயரமானதால், வீடு 2 அடி கீழே இறங்கியுள்ளது. இதனால், சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை பெய்தால் மழை நீரோடு கலந்து சாக்கடை நீரும் சேர்ந்து வீட்டுக்குள் சென்றிருக்கிறது.
இந்நிலையில், இதை எவ்வாறு சரி செய்யலாம் என தங்கவேல் யோசித்துள்ளார். அப்போது, சென்னையைச் சேர்ந்த கோல்டன் பில்டிங் என்ற நிறுவனத்தினர், பழைய கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே ஜாக்கி வைத்து உயர்த்தியும், முன்னும் பின்னும் இடம் நகர்த்தியும் தருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டை சுமார் 4 அடி தூரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.