நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் பட்டம் விடும் நூலில் காகம் ஒன்று சிக்கியது. நீண்ட நேரம் போராடியும் காகத்தால் விடுபட முடியவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த நாமக்கல் மாவட்ட காவல் துறையின் ஊர்க் காவல் படையில் காவலர்களாகப் பணியாற்றி வரும் குப்தா, கண்ணன் ஆகியோர் சிறிதும் யோசிக்காமல், அந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, நூலில் சிக்கிக் கொண்ட காகத்தை விடுவித்தனர்.