தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தனது 91ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சிலம்பொலி செல்லப்பனின் மறைவுக்கு தமிழறிஞர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்ச்சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிலம்பொலி செல்லப்பன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் - அஞ்சலி
நாமக்கல்: தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் மறைவுக்கு நாமக்கல் தமிழ்ச் சங்கத்தினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

சிலம்பொலி செல்லப்பா
நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த சிலம்பொலி செல்லப்பனின் உருவப்படத்திற்கு பொதுமக்களும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிலம்பொலியாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான சிவியாம்பாளையத்தை வந்தடைந்தது. நாளை காலை 10 மணியளவில் அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெறுமென அவரின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்தனர். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Last Updated : Apr 8, 2019, 10:35 AM IST