நாமக்கல்லில் கடும் மூடுபனி: முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்! - Heavy snow fall
நாமக்கல்: அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவியதால், நாமக்கல் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி வரை வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே பயணம் மேற்கொண்டனர்.
snow
நாமக்கல்லில் இன்று (டிச. 14) அதிகாலை முதலே கடும் மூடுபனி இருந்துவருகிறது. இதனால் காலை 9 மணி வரை இந்தப் பனிப்பொழிவு நீடித்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் இருசக்கர வாகனங்களில் பணிக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் நாமக்கல் அடுத்துள்ள வளையப்பட்டி புதன் சந்தை, பரமத்திவேலூர், புதுசத்திரம், இராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.