நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுகிறது.
நாமக்கல்லில் பலத்த மழை - வாகன ஓட்டிகள் அவதி - நாமக்கல் மாவட்ட செய்திகள்
நாமக்கல்: இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்.9) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை நாமக்கல், முதலைப்பட்டி, மோகனூர், புதன்சந்தை, வேட்டாம்பாடி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, ரெட்டிபட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சேலம் சாலை, குட்டை தெரு, லைன் தெரு, நேதாஜி சிலை உள்ளிட்ட நாமக்கல் நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.