நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 7) நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுகாதார செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உருமாறிய கரோனா வைரஸ்; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல் - பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்
நாமக்கல்: தமிழ்நாட்டில் உருமாறிய கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Radhakrishnan
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உருமாறிய கரோனா வைரஸ் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உருமாறிய கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்" என்றார்.