ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி! - HANDYCAFT
நாமக்கல்: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து மூன்று சக்கர வாகனங்களில் புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேரணியை, மாவட்ட தேர்தல் பார்வையாளர் வாணி மோகன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசியா மரியம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
இதில், 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும், பணம் வாங்காமல் வாக்களிக்கவேண்டும், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. மேலும், இந்த பேரணியானது நல்லிப்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாகச் சென்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தைச் சென்றடைந்தது.