சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை மூர்த்தி தனது சம்பளப் பணத்தை எடுக்க நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள ஏடிஎம்-யில் இரண்டு கட்டங்களாக ரூ.40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.
அதில் வந்த இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்தும் கிழிந்தும், ஒட்டப்பட்டும், நிறம் மாறியும் கள்ள நோட்டுகள் போல் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் அதற்கு வங்கி மேலாளர், உங்களது வங்கிக் கணக்கை தெரிவியுங்கள். பணம் கணக்கில் செலுத்தப்படும் என அலட்சியமாக பதில் அளித்து, மூர்த்தியை அங்கிருந்து கிளப்பிவிட முனைப்பு காட்டியுள்ளனர். இது குறித்து மூர்த்தி நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூர்த்தியிடம் விசாரணை செய்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்து வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளநோட்டுகள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்யும் காட்சிகள் இதனைத் தொடர்ந்து, மூர்த்திக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏடிஎம் உள்ளே எப்படி கள்ளநோட்டுகள் சென்றது என்பது குறித்து நாமக்கல் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.