தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழின் முக்கியத்துவத்தை மத்திய அரசு குறைக்கக் கூடாது - சகாயம் ஐ.ஏ.எஸ். - மக்கள் பாதை

நாமக்கல்: அரசியல் சட்டம் அனுமதித்த தமிழ் உள்ளிட்ட எந்த மொழிக்கான முக்கியத்துவத்தையும் மத்திய அரசு குறைக்கக் கூடாது என்று சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

sagayam ias

By

Published : Sep 8, 2019, 4:05 PM IST

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பருவ காலங்களில் பெய்யக்கூடிய மழைநீரைச் சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தவேண்டும்.

நீர்வரத்து கால்வாய்களைப் பாதுகாத்தாலே தண்ணீர் பிரச்னையை கையாள முடியும். சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேட்டூர் அணை நிரம்புகிறது. இந்த உபரி நீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில்அரசானது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த சகாயம் ஐ.ஏ.எஸ்.

தமிழ் சமூகத்தை நேசிக்கும் இயக்கமாக மக்கள் பாதை இயக்கம் தற்போது உள்ளது. மக்கள் பாதை அரசியல் இயக்கமாக மாற தமிழ் சமூகம்தான் முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் அனுமதித்த மொழிகளில் தமிழ் உட்பட எந்த மொழிக்கும் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details