நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டுவரும் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்புவரை என மொத்தமாக 240 மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறை, ஏழாம் வகுப்பறை, பத்தாம் வகுப்பறை ஆகிய கட்டடங்கள் 2008-2009ஆம் ஆண்டு பள்ளி சீரமைப்பு திட்டத்தில் கீழ் மூன்று கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன.
இந்தச் சூழலில் இன்று காலை ஏழாம் வகுப்பறைக்கு மாணவ மாணவியர் வழக்கம்போல் சென்றனர். அப்போது, அங்கிருந்த கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து மேசைகளில் உடைந்து விழுந்திருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து நேற்று நள்ளிரவில் ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.