நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வெளிமாவட்ட வியாபாரிகள் வராததாலும்; வேலைக்கு ஆட்கள் வராததாலும், வாழைத்தார் மரத்திலேயே பழங்கள் பழுத்து பறவைகளுக்கு இரையாவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகளவு கோயில் திருவிழாக்களும் பூஜைகளும் நடைபெறும் காலம் என்பதால், பூவன் வாழைப்பழம் அதிகளவில் பயன்படும் எனக்கருதி, திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பூவன் வாழை மரத்தையே நடவு செய்துள்ளனர்.