மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லாரி தொழிலை மாநில அரசு நசுக்குவதாக குற்றஞ்சாட்டினார்.
லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு - லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு - மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம்
நாமக்கல்: குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை மட்டும் லாரிகளில் பொருத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு நிர்பந்திப்பதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றஞ்சாட்டினார்.
லாரி தொழிலை நசுக்கும் தமிழ்நாடு அரசு
பின்னர் மாநில அரசுக்கு வைத்த கோரிக்கைகள்
- லாரிகளுக்கு 49 நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போக்குவரத்துத் துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- இரு நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை (REFLECTED STICKER) மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்து 11 நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை ஒட்ட அனுமதிக்க வேண்டும்.
- லாரிகளில் வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ் (தடங்காட்டி) கருவிகளை 8 நிறுவனங்களில் மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவை கைவிட்டு 140 நிறுவங்களின் தடங்காட்டி கருவிகளைப் பொருத்த அனுமதிக்க வேண்டும்.
- டீசல் விலை கடந்த நான்கு நாள்களாக உயர்த்துவதை கைவிட வேண்டும்.
- லாரிகளுக்கான காலாண்டு வரி செலுத்துவதற்கான போக்குவரத்துத் துறை இணையதள முடக்கத்தை உடனடியாகச் சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க:மதுரை தீவிபத்து: பழமையான கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்