கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் 14 எல்லை நுழைவாயில்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, இவர்கள் சென்னை, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அவர்களின் பயண விவரம் மற்றும் உடல் வெப்பநிலையை பொறுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி நுழைவாயிலான பவித்திரம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.