தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் - ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் முதியவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முதியவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்
முதியவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

By

Published : Jul 16, 2022, 10:30 PM IST

நாமக்கல்ராசிபுரத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் (TN 30 N 1320 எண்) அரசுப்பேருந்தில் முரளிகிருஷ்ணன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராசிபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முயன்றபோது முரளிகிருஷ்ணன் வழித்தடம் குறித்து தகவல் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக முதியவருக்கும் ஓட்டுநர் முரளிகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, ஆபாச வார்த்தைகளால் முதியவரை திட்டிய முரளிகிருஷ்ணன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது முதியவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

முதியவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

இதனை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதுதொடர்பாக முதியவர் அளித்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சேலம் போக்குவரத்து கோட்ட மேலாளர், ஓட்டுநர் முரளிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!

ABOUT THE AUTHOR

...view details