தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் - சாலையில் வீசப்பட்ட மருத்துவ அட்டைகள்

நாமக்கல்: பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் சேந்தமங்கலம் அருகே சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேந்தமங்கலம் செய்திகள்  senthamangalam news  சாலையில் வீசப்பட்ட மருத்துவ அட்டைகள்  goverment medical card throwen
goverment medical card throwen road side

By

Published : Feb 4, 2020, 8:52 PM IST

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள அக்கியம்பட்டி சுடுகாடு எதிர்புறம் உள்ள சாலையோரத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வீசி எறியப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினர்.

சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்

பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இந்த அட்டைகளை சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளிடையே விரிவான விசாரணை மேற்கொண்டு தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:‘இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details