நாமக்கல் மாவட்டத்தில் கொங்குநாட்டு வேளாளர் சங்க அறக்கட்டளை சார்பில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்திய கிராம விளையாட்டு ஒருங்கிணைப்பு குழு குஜராத் மாநிலத்தில் நடத்திய தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டஇப்பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
மேலும், தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டில் மாணவி லட்சுமி என்பவர் தங்கப்பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து 14 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் 12 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்று தங்கப்பதக்கம் பெற்றனர்.