நாமக்கல் நகரில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் 'ஆடுகள் விற்பனைவாரச்சந்தை' அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் வியாபாரிகள் இங்கு விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் இந்தச் சந்தைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடுகள் விற்பனை சந்தையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் ஐந்தாயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது.